Monday, 10 February 2014

'க' வும் 'க்' கும்

தமிழின் அடிப்படையான எழுத்துக்களில் ஒன்றான வையும் அதன் உச்சியின் மேல் புள்ளி வைத்து க் என்ற எழுத்தையும் இன்றைய பாடத்தில் கற்கிறோம்
வழக்கப்படி இரு நேர்கோடுகள் வரைந்து மேலே ஒரு கோடு போட்டு அவற்றை இணைக்கவும் .கீழே ச வுக்கு போட்ட வளைவைப் போட்டு அதை மூடி விடவும். இது தான் க 


மீண்டும் மீண்டும் எழுத்துப் பயிற்சி
எழுத்தைக் காணும் இடத்தில் எல்லாம் மனசுக்குள் சொல்லிக்கொள்ளுதல் இதனால் எழுத்து நினைவில் நன்றாய்ப் பதியும்    

Friday, 7 February 2014

புதிய சொற்களை உருவாக்கலாம்


நீங்கள் இதுவரை ட, ச, ப ,ம  என்ற நான்கு எழுத்துக்களையும் அவற்றின் மேல் புள்ளி வைத்தால் ட், ச் ,ப் ,ம் என்ற  எழுத்துக்களையும் அறிவீர்கள்.
அவற்றை ஒன்றோடு ஒன்று கலந்து நீங்கள் அறிந்த புதிய சொற்களை உருவாக்கலாம் (எடுத்துக்காட்டு)
சச், பச், டச்,  மச்
மேலே கொடுத்து உள்ள அட்டையில் சில சொற்கள் உள்ளன. அவற்றை நீங்களாகவே வாசித்து கற்பிப் போரிடம் உச்சரித்துக் காட்டி திருத்தம் தேவைப்பட்டால் செய்து கொள்ளவும்
சமம்,  சட்டம்  ,மடம்
சடசட ,மடமட, மட்டம்
டமடம ,மச்சம்,  டச்சப்
சப்பம் இவ்வாறு புரிந்த மற்றும் புரியாத சொற்களைக் கூட எழுத்து எழுத்தா
உச்சரித்தபடி சொல்லிவரவும்

Thursday, 6 February 2014

'ச'வும் 'ச்'சும்





 
தமிழ் வாழ்க! தமிழ் வளர்க என்று வெறும் கூச்சல் போடுவதால் மட்டும் தமிழ் வாழ்ந்து விடாது. வளர்ந்து விடாது.கற்பியுங்கள். கற்றுக்கொள்ளுங்கள்.அப்போது தமிழ் வாழும், வளரும் 
மொழி கற்பிப்பது சற்று சலிப்பூட்டும் வேலை தான். கற்பதும் அப்படியே. பொறுமையாகவும் விருப்பத்தோடும் செய்ய வேண்டும். மறவாதீர்கள் 

Wednesday, 5 February 2014

மூன்று எழுத்துக்கள்

இது வரை கற்றுக்கொண்ட எழுத்துக்களை  ஒன்றன் பக்கத்தில் ஒன்றாக எழுதி தனித்தனியே மற்றும் சேர்த்துப் படிக்க வேண்டும்
ம ,ம்  ம ,ம்  ம ,ம்  ம ,ம்ம, ம்
மட மட பட பட டம டம
டம டம டம் டம்

பிறகு மூன்று எழுத்துக்கள் கொண்ட சொல்

படம், மடம் 

பிறகு நான்கு  எழுத்துக்கள் கொண்ட சொல்

மடமட    டமடம
பம்பம்    டம்பம்

முன்பே குறிப்பிட்டது போல கற்பவர் அருகே கற்பிப்போர் அமர்ந்து வாய்விட்டுச் சொல்லி எழுதுமாறு வலியுறுத்தவும்