Monday 10 February 2014

'க' வும் 'க்' கும்

தமிழின் அடிப்படையான எழுத்துக்களில் ஒன்றான வையும் அதன் உச்சியின் மேல் புள்ளி வைத்து க் என்ற எழுத்தையும் இன்றைய பாடத்தில் கற்கிறோம்
வழக்கப்படி இரு நேர்கோடுகள் வரைந்து மேலே ஒரு கோடு போட்டு அவற்றை இணைக்கவும் .கீழே ச வுக்கு போட்ட வளைவைப் போட்டு அதை மூடி விடவும். இது தான் க 


மீண்டும் மீண்டும் எழுத்துப் பயிற்சி
எழுத்தைக் காணும் இடத்தில் எல்லாம் மனசுக்குள் சொல்லிக்கொள்ளுதல் இதனால் எழுத்து நினைவில் நன்றாய்ப் பதியும்    

Friday 7 February 2014

புதிய சொற்களை உருவாக்கலாம்


நீங்கள் இதுவரை ட, ச, ப ,ம  என்ற நான்கு எழுத்துக்களையும் அவற்றின் மேல் புள்ளி வைத்தால் ட், ச் ,ப் ,ம் என்ற  எழுத்துக்களையும் அறிவீர்கள்.
அவற்றை ஒன்றோடு ஒன்று கலந்து நீங்கள் அறிந்த புதிய சொற்களை உருவாக்கலாம் (எடுத்துக்காட்டு)
சச், பச், டச்,  மச்
மேலே கொடுத்து உள்ள அட்டையில் சில சொற்கள் உள்ளன. அவற்றை நீங்களாகவே வாசித்து கற்பிப் போரிடம் உச்சரித்துக் காட்டி திருத்தம் தேவைப்பட்டால் செய்து கொள்ளவும்
சமம்,  சட்டம்  ,மடம்
சடசட ,மடமட, மட்டம்
டமடம ,மச்சம்,  டச்சப்
சப்பம் இவ்வாறு புரிந்த மற்றும் புரியாத சொற்களைக் கூட எழுத்து எழுத்தா
உச்சரித்தபடி சொல்லிவரவும்

Thursday 6 February 2014

'ச'வும் 'ச்'சும்





 
தமிழ் வாழ்க! தமிழ் வளர்க என்று வெறும் கூச்சல் போடுவதால் மட்டும் தமிழ் வாழ்ந்து விடாது. வளர்ந்து விடாது.கற்பியுங்கள். கற்றுக்கொள்ளுங்கள்.அப்போது தமிழ் வாழும், வளரும் 
மொழி கற்பிப்பது சற்று சலிப்பூட்டும் வேலை தான். கற்பதும் அப்படியே. பொறுமையாகவும் விருப்பத்தோடும் செய்ய வேண்டும். மறவாதீர்கள் 

Wednesday 5 February 2014

மூன்று எழுத்துக்கள்

இது வரை கற்றுக்கொண்ட எழுத்துக்களை  ஒன்றன் பக்கத்தில் ஒன்றாக எழுதி தனித்தனியே மற்றும் சேர்த்துப் படிக்க வேண்டும்
ம ,ம்  ம ,ம்  ம ,ம்  ம ,ம்ம, ம்
மட மட பட பட டம டம
டம டம டம் டம்

பிறகு மூன்று எழுத்துக்கள் கொண்ட சொல்

படம், மடம் 

பிறகு நான்கு  எழுத்துக்கள் கொண்ட சொல்

மடமட    டமடம
பம்பம்    டம்பம்

முன்பே குறிப்பிட்டது போல கற்பவர் அருகே கற்பிப்போர் அமர்ந்து வாய்விட்டுச் சொல்லி எழுதுமாறு வலியுறுத்தவும்

Tuesday 28 January 2014

மூன்றாவது அட்டை

சென்ற பாடப் பயிற்சியில் வின்   வலப்புறம் ஒரு நேர்கோடு வரைந்ததில் அது ஆயிற்று , அந்த ப வின்  வலப்புறமுள்ள நேர்கோட்டின் மேல் ஒரு வளைகோடு வரைந்தால் அது ஆகும்
மேலே உள்ள படத்தில் முதல் எழுத்து . அடுத்த எழுத்து ம்
முதல் படம் மரம். அடுத்த படம் பழம்
நாம் ஏற்கெனவே அறிந்த இரு எழுத்துக்களை வைத்தே இந்த எழுத்துக்களையும் சொற்களையும் கற்கலாம்
சென்ற பாடத்தில் சொன்னது போல், , என்றும் ம், ம், ம்என்றும்வாய்விட்டோ மனசுக்குள்ளோ   சொன்னபடியே ஒரு வெள்ளைத்தாளில் எழுதி எழுதிப் பழகவும்
மீண்டும் மீண்டும் பயிற்சி செய்தால் தவிர மொழி பழக்கத்திற்கு வராது.
கற்கிற ஒவ்வோர் எழுத்தையும் வெளியிடங்களில் காணும்போது அந்த எழுத்துக்குரிய ஒலியோடு  மீண்டும் அதை நினைவுகூரவேண்டும்

Monday 27 January 2014

இரண்டாவது


தமிழ் கற்பிக்கும் அரிய பணி

 முதல் எழுத்து அட்டை
உலகெங்கிலும் உள்ள தமிழ் நெஞ்சங்களுக்கு,
எனது பணிவான வணக்கம்.
இந்த வலைத்தளம் மூலம் தமிழறியாத தமிழர்களுக்கும் , தமிழ் கற்க விரும்பும் தமிழர் மற்றும் தமிழர் அல்லாதோருக்குத் தமிழ் கற்பிக்கும் அரிய பணியை எளிய முறையில் துவங்க எண்ணுகின்றேன்.
முதன் முதலில் எழுத்துக்களை அறிவோம்
அதற்கான முதல் எழுத்து அட்டையை அறிமுகம் செய்கிறேன்  
மேலே கொடுப்பட்டுள்ள அட்டையை வாசித்து எழுதிப் பழக ஓரளவேனும் தமிழ் அறிந்த ஒருவர் உதவி முதல் தேவை
அவ்வித உதவி இல்லாதவருக்காக எளிய ஆங்கிலத்தில் சிறு விளக்கம் பின்வருமாறு

The letter is not the first letter in Tamil

But it is easier to learn  for the  beginner

You pronounce( say) it as TTA. The image above it s Patam (Picture)

Putting a full stop  above the letter ட becomes  ட்

You have to pronounce (say) it as It 


The image above it is Pattam (Kite)
கற்போர் கற்பிப்போர் இருவருமே மீண்டும் மீண்டும் தரப்பட்டுள்ள எழுத்துக்களை ஒரு நோட்டுப் புத்தகத்திலோ வெள்ளைத் தாளிலோ எழுதி எழுதிப் பார்த்து பயிற்சி செய்ய வேண்டும் . அப்போது தான் இந்த இரு எழுத்துக்களும் நினைவில் நிற்கும்